ஆவா முக்கியஸ்தருக்கு கடூழிய சிறை

நீதிமன்ற வளாகத்தில் வைத்து தப்பிச்சென்ற ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் எனக் கூறப்படும் நிசா விக்டருக்கு ஒன்றரை வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, மல்லாகம் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபரான நிசா விக்டர், அந்த வழக்கில் முற்படுத்துவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிமன்றுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துச் செல்லப்பட்ட போது, அங்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த நிசா விக்டர், நீதிமன்ற மதிலில் பாய்ந்து தலைமறைவாகினார்.

சந்தேகநபரைத் துரத்திச் சென்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், வீடொன்றுக்குள் மறைந்திருந்த வேளை அவரை மடக்கிப் பிடித்த நிலையில், குறித்த நபரை இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோதே குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு