புதிய தேசியக் கொடியை அமைப்பதே தமிழ் மக்களின் கோரிக்கை

தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறில்லை. தேசியக் கொடியினை ஏற்ற மறுத்தது தவறா? புதிய அரசியலமைப்பு புதிய தேசியக் கொடி அமைப்பதே தமிழ் மக்களின் கோரிக்கையென வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தற்போது சர்ச்சையில் எழுந்துள்ள தேசியக்கொடி விவகாரம் தொடர்பாக இன்று (21) யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், வடமாகாண கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரன் தேசிய கொடியினை ஏற்ற மறுப்புத் தெரிவித்த விடயம் தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு முன்னாள் கல்வி அமைச்சர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தேசிய கொடியினை வேறு யாராவது ஏற்றுமாறு தெரிவித்துள்ள நிலையில், அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் இதை பெரிதாக்கியுள்ளார். ஓன்றுமில்லாத விடயத்தை பெரிய விடயமாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றார்கள். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தவர்கள் இலங்கைப் பாரளுமன்றத்தில் இருந்தவாரே பிரிட்டிஷ்க்கு எதிராக குரல் கொடுத்தார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைமையில் தான் அரசியலமைப்பினையும், தேசிய கொடியினையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேசியக் கொடியினை அவமதிக்கவில்லை. தேசியக் கொடியினை கீழே போட்டு மிதிக்கவில்லை. அவர் தேசிய கொடியினை ஏற்ற மறுத்துள்ளார். அதை சர்ச்சையாக்கி, சட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றார்கள். அந்த சட்ட நடவடிக்கை என்ன என்பதனைப் பார்க்கலாம் எனவும், அமெரிக்காவில் 50 மாநில அரசுகள் இருக்கின்ற இடத்தில்கூட ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசிய கொடியினை எரிப்பதற்குகூட உரிமை உள்ளதென அந்த நாடு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறாக தெரியவில்லை. தேசிய கொடியினை ஏற்ற மறுத்தது தான் என்பது தவறான கருத்து. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு புதிய தேசிய கொடி அமைக்கப்பட வேண்டும் எனவும், அதுவரை இந்த சர்ச்சைகள் நீடிக்கும் எனவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு