கள் இறக்குவதற்கான தடை நீக்கப்படும் – டக்ளஸிடம் மைத்திரிபால உறுதியளிப்பு

பனை மரத்திலிருந்து “கள்” இறக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு வெளியாகியிருந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி பனை மரத்திலிருந்து “கள்” இறங்குவதற்கு வசதியாக அமைச்சரவையில் தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கடசியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, “கள்” இறக்குவதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக வெளியான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் இவ்விடயத்திற்கு உடனடியான தீர்வு வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

“கள்” இறக்குவதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து குறிப்பாக வடமாகாணத்தில் சுமார் 12 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதையும், பனைசார் உற்பத்தி முயற்சிகள் பாதிக்கப்பட்டிருப்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் டக்ளஸ் தேவானந்தா எம்.பி கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு