யாழில் மீண்டும் வெள்ளைவான் கடத்தல்?

யாழில் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் வெள்ளைவானில் பலாத்காரமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளமையால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக வைத்து நேற்றிரவு 8.00 மணியளவில் வெள்ளை வானில் வந்த கோப்பாய் பொலிஸார் யாழ். இராமநாதன் வீதி கலட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். நகரிலுள்ள மங்கை புடவை விற்பனை நிலையத்தில் பணியாற்றும் இவர் வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக யாழ். பஸ் நிலையத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்த போது, வெள்ளை வானில் வந்த கோப்பாய் பொலிஸார் இளைஞரை வானில் ஏறுமாறு தெரிவித்துள்ளதாகவும், ஏற மறுத்ததைத் தொடர்ந்து, இளைஞனை பலாத்காரமாக ஏற்றிச்சென்றுள்ளதாகவும், பொலிஸாரின் அராஜகத்தினை பஸ் நிலையத்தில் நின்றவர்கள் பார்வையிட்டதுடன், தற்போது யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் அராஜகம் அதிகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவ்வாறு பலாத்காரமாக கடத்திச் சென்ற போது, அங்கிருந்தவர்களிடம் இந்த இளைஞர் தமக்கு தேவையான ஒருவர் என்றும் கூறியுள்ள நிலையில், பொலிஸாரினால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞரின் பெற்றோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்று இளைஞரை விடுவிக்குமாறு கேட்டதற்கு, பொலிஸார் மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் இளைஞரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு