ப்ரியன்ஜித் பதவி விலகல்

தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் ப்ரியன்ஜித் விதாரண பதவி விலகியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தின் போது அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளதுடன், சுகாதார மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அவர் குறித்த பதவியில் இருந்து விலகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னர் தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க கட்சித் தலைவரை விமர்சித்து அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு