ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் வென்காய் சாங் இன்று இலங்கை வரவுள்ளார்.
இன்று முதல் 25ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் எனவும், இதன்போது அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பல்வேறு உயர்மட்ட அரச திணைக்கள அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மையப்படுத்தி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.