நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் – ஜனாதிபதி

மாற்றம் ஒன்றுக்காக அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தாம் மாற்றத்தின் பொருட்டு தற்போதைய நிலையில் பலவற்றை செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதுடன், இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் சரியாக 2014ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி கொழும்பு நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து கடந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக குறிப்பிட்டதாகவும், அந்த மாற்றம் சிறந்ததா என்று சிந்திக்கும் போது, நிச்சயம் சிறந்ததாகவே இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

அன்று பொருளாதாரத்தில் நாடு பின்தங்கி இருந்ததாகவும், அப்போது இருந்த மின்சார நாற்காலி குறித்த பேச்சுகள் தற்போது இல்லை எனவும், நாடு தற்போது சிறந்த பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு