கித்துள் கள்ளிற்கு மானியம் வழங்கக் கோரிக்கை

தீங்கிழைக்கும் மதுபானங்களுக்கு மாற்றீடாக கித்துள் கள் பயன்படுத்தும் வகையில் மானியங்களை வழங்குமாறு, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், கித்துள் கள் நோய்களிலிருந்து பாதுகாக்கக் கூடிய தன்மை கொண்ட பானம் எனவும், மூதாதையர்கள் இதனைப் பருகியமையால் 100க்கும் மேற்பட்ட வருடங்கள் ஆயுளைக் கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பியருக்கு அரசு வரிச் சலுகை அளித்துள்ளது எனவும், கித்துள் கள்ளுக்கும் இதுபோன்று சலுகைகள் பெற்றுக்கொடுத்து அதனை பிரபலமாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு