நீர்வாழ் உயிரினங்களை விருத்தி செய்வதற்கான யோசனைக்கு அனுமதி

மட்டக்களப்பு, மண்முனை தெற்கு பிரதேசத்தில் நீர்வாழ் உயிரினங்களை விருத்தி செய்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இறால் வளர்ப்புக்கு பெயர்போன மட்டக்களப்பு, மண்முனை தெற்கு பிரதேசம் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இங்கு மீண்டும் நீர்வாழ் உயிரினங்களை விருத்தி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு உயரிய பங்களிப்பினை வழங்குவதற்கும், பிரதேசத்தில் 900 நேரடி வேலைவாய்ப்புக்களை புதிதாக உருவாக்குவதற்கும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

இதனடிப்படையில், அப்பிரதேசத்தினுள் 450 அளவில் குட்டைகளை அமைத்து, வர்த்தக ரீதியில் வருமானம் ஈட்டித்தருகின்ற மீனினங்களை வளர்ப்பதற்காக, அரசாங்கத்தின் கொள்முதல் செயன்முறையின் கீழ் தெரிவு செய்யப்படுகின்ற முதலீட்டாளர்களுக்கு இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக குத்தகையின் அடிப்படையில் இவ்விடங்களை ஒதுக்கி கொடுப்பது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு