பெற்றோரைத் தேடும் பிள்ளைகளுக்கு உதவத் தயார்

இலங்கையைச் சேர்ந்த சுமார் 4000 பிள்ளைகள் நெதர்லாந்து, டென்மார்க், சுவீடன், மற்றும் பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகளில் வசிப்பதாகவும், இவர்கள் தற்போது தமது பெற்றோரைத் தேடி இலங்கைக்கு வருவதால் இவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தமைக்கு அமைய, நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜொஹானே டொர்னேவார்ட் மற்றும் சுகாதார அமைச்சருக்குமிடையில் நேற்று சுகாதார அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், இலங்கைக்கு பெற்றோரைத் தேடிவரும் பிள்ளைகளுக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்துடன் இணைந்து டீ.என்.ஏ பரிசோதனையை செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு