பதவி விலகினார் முகாபே

சிம்பாப்வே ஜனாதிபதி றொபேர்ட் முகாபே, தனது பதவியிலிருந்து விலகுவதாக, உத்தியோகபூர்வமாக நேற்று அறிவித்துள்ளார்.

அவரது அரசியல்ரீதியாக நண்பர்களும் அந்நாட்டு இராணுவமும், அவருக்கு எதிராகத் திரும்பியிருந்த நிலையில், சுமார் 04 தசாப்தங்களாக நீடித்த ஆட்சி, நேற்று முடிவுக்கு வந்துள்ளது.

93 வயதான முகாபே, இராணுவப் புரட்சியை முகங்கொடுத்திருந்ததுடன், கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தார். அவற்றுக்கு மத்தியிலும், பதவியிலிருந்து விலகுவதற்கு அவர் மறுப்புத் தெரிவித்த நிலையில், அவரைப் பதவியிலிருந்து விலக்குவதற்கான நடவடிக்கைகள், நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இது கடினமான அரசியல் மாற்றமாக அமையுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், ஜனாதிபதிப் பதவியிலிருந்து முகாபே விலகிவிட்டாரென, நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜேக்கப் முடென்டா அறிவித்ததைத் தொடர்ந்து, பதவி விலக்கல் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

1980ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றமை முதல், இரும்புக்கரம் கொண்டு சிம்பாப்வேயை ஆண்டு வந்த முகாபே, தனது மனைவியின் அரசியல் பிரசன்னத்துக்கு வாய்ப்பு ஏற்படுத்த முயன்றே, தனது பதவியையும் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முகாபேயின் பதவி விலகலைத் தொடர்ந்து, தலைநகர் ஹராரேயின், மக்கள் தமது கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு