சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் தெரிவு

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் சர்வதேச நீதிமன்றம் செயற்பட்டு வருகின்றது. இவ்வாண்டிற்கான நீதிபதிகள் தேர்வில் ஏற்கனவே 04 பேர் தெரிவாகியிருந்த நிலையில், 5ஆவது இடத்திற்கு இந்தியாவின் தல்வீர் பண்டாரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடத்திற்கு இங்கிலாந்தின் கிறிஸ்டோபர் கிரீன்வுட்டிற்கும் இந்தியாவின் பண்டாரிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. இதற்கென இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென இங்கிலாந்து வலியுறுத்தி வந்த போதிலும், இரகசிய வாக்கெடுப்பைக் கையாளக்கூடாதென இந்தியா ஐ.நாவிடம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக இங்கிலாந்து அறிவித்ததைத் தொடர்ந்து 12ஆவது கட்ட தேர்தல் நேற்று அதிகாலை இடம்பெற்றது. இதன்போது, ஐ.நா பொதுச் சபையில் மொத்தம் உள்ள 193 உறுப்பினர்களில் 183 பேர் இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பாதுகாப்பு கவன்சிலில் மொத்தம் உள்ள 15 உறுப்பினர்களும் இந்தியாவிற்கே வாக்களித்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின் தல்வீர் பண்டாரி (70) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு