மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் அறிவிப்பு

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக இமானுவேல் பெர்னாண்டோ அறிவிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் மறை மாவட்ட பேராலயமான புனித செபஸ்தியார் ஆலயத்தில் இந்த அறிவித்தல் இன்று மாலை வெளியிடப்பட்டதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை தெரிவித்ததுடன், பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸினால் புதிய ஆயருக்கான பெயர் பரிந்துரைக்கப்பட்டு, வத்திக்கான் தூதரகத்தினூடாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக இமானுவேல் பெர்னாண்டோ செயற்பட்டு வந்தார்.

மன்னார் மறை மாவட்டத்தின் இரண்டாவது ஆயரான இராயப்பு ஜோசப் ஆண்டகை உடல் நலக்குறைவினால் கடந்த வருடம் ஓய்வு பெற்றிருந்த நிலையில், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆயராக இருந்து ஓய்வுபெற்ற கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அப்போஸ்தலிக்க பரிபாலகராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு