நடிகர் வினுச்சக்கரவர்த்தி காலமானார்

திரைப்பட நடிகர் வினுசக்கரவர்த்தி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

1945ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பிறந்த வினுசக்கரவர்த்தி, கோபுரங்கள் சாய்வதில்லை, குரு சிஷ்யன், ராஜாதி ராஜா போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னிந்தியத் திரைப்படங்களில் வினுசக்கரவர்த்தி நடித்துள்ளார்.

இவர், ‘வண்டிச்சக்கரம்’ படத்தின்மூலம் நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார். கடைசியாக 2014ஆம் ஆண்டு வெளிவந்த ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் நடித்திருந்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு