2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்க விஷேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலான காலப்பகுதியில் இந்த விஷேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.