மஹிபால ஹேரத் மஹிந்தவுக்கு ஆதரவு

சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கோட்டாபய ராஜபக்ஷ கேகாலையில் இடம்பெற்ற கூட்டமொன்றிற்கு வந்திருந்த வேளை, அவருடன் மஹிபால ஹேரத்தின் செயலாளர் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கேகாலையில் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளதாகவும், அக்கூட்டத்தில் மஹிபால ஹேரத் மஹிந்தவுக்கு ஆதரவளிக்கும் வகையில் மேடையில் ஏறுவார் எனவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு