மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடமாகாண சபை அவைத் தலைவர் மறுப்பு

வடமாகாண சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 110ஆவது அமர்வு இன்று யாழ். கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற போது வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட்டினால் இந்தக் கோரிக்கை சபைக்கு முன்வைக்கப்பட்டது.

இன்றைய அமர்வு நிறைவடைவதற்கு முன்னால் மாவீரர்களை நினைவு கூறும் விதமாக வடமாகாண சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த அவைத் தலைவர், நாங்கள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவே வேறு இடத்தில் அஞ்சலி செலுத்துவோம் என்றும் அவையில் வேண்டாம் என்றும் கூறி, சபையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை ஒத்தி வைத்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு