அமைச்சுப் பதவி அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கினால் மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுமென கூட்டு எதிரணி நேற்று முடிவெடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் நம்பிக்கையிழந்துள்ள நிலையில்,அந்த அரசாங்கத்தின் ஒரு பங்குதாரராக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து சேவையாற்றுவது பலனற்ற ஒன்றெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் அறிவிக்கவென சீ.பி.ரத்னாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.