ரெஜினோல்ட் விளக்கம் கோரினார்

வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியினை புறக்கணித்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே விளக்கம் கோரியுள்ளார்

இவ்விடயம் தொடர்பில் இன்று வடமாகாண முதலமைச்சரிடம் கடிதம் மூலம் இந்த விளக்கத்தினை ஆளுனர் கோரியுள்ளார்

முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டவர் தமது முன்னிலையில் இலங்கையின் அரசியலமைப்பிற்கு கட்டுப்படுவதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார் என்பது அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், இந்நிலையில் அண்மையில் சிங்கள பாடசாலை ஒன்றில் தேசியக் கொடி தொடர்பில் அவர் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அமைச்சரவை தலைவர் என்ற ரீதியில் விளக்கமளிக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான ஆவணங்கள் சிலதும் முதலமைச்சருக்கு ஆளுனரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு