வீரர்களாக தம்மைச் சித்தரிப்பவர்கள் நாட்டிற்குத் தேவையில்லை

மூளையைப் பாவித்து வேலை செய்பவர்களே நாட்டிற்குத் தேவை எனவும் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுடன் செயற்படுபவர்களும் ஊடகங்களுக்குத் தம்மை வீரர்களாக சித்தரிப்பவர்களும் நாட்டிற்குத் தேவையில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகவெரட்டியவில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன், அரசியல் ஞானமுள்ள, முதிர்ச்சியுள்ள அரசியல்வாதிகள் சிலர் தலைமைத்துவத்தை ஏற்று, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் எமக்கு ஒப்படைத்த பொறுப்புக்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். அதனால் தேவையற்ற வகையில், பொறுப்புக்களில் இருந்து விலகி, பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, ஊடகங்களின் ஊடாக விமர்சனங்களை முன்வைத்து, தம் மீதே சேறு பூசிக்கொண்டு பின்னர் அழ வேண்டாமென தான் அனைவருக்கும் மிகவும் தெளிவாக இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவது தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், மிக விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேவையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு