பாகிஸ்தானிலும் குண்டுத் தாக்குதல் – பொலிஸ் உயரதிகாரி பலி

பாகிஸ்தான் பெஷாவரில் இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் மேலதிக பொலிஸ் மா அதிபர் அஷ்ரப் நுர் பலியானதுடன், அவரது மெய்பாதுகாவலரும் பலியாகியுள்ளார்.

அத்துடன், அவருக்கு பாதுகாப்பு வழங்கிய ஆறு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக பொலிஸ் மா அதிபர் பயணித்த வாகனத்தை, |மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த தற்கொலை குண்டுதாரி மோதி வெடிக்கவைத்துள்ளதாகவும், சாலையோரத்திலுள்ள பல மரங்கள் மற்றும் வீதிகளில் சென்ற ஏனைய வாகனங்களும் தீப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு