கோட்டாபய கைதானால் போராட்டம் வெடிக்கும்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால், மகாநாயக்கர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படுமென தாய் நாட்டை காக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனை தெரிவித்ததுடன், கோட்டாபய ராஜபக்ஷ கடந்த காலங்களில் நாட்டுக்கு ஆற்றிய சேவையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை எனவும், தற்போது அவரை கைது செய்வதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியகிடைத்துள்ளதாகவும், இது தற்போதைய அரசாங்கத்தின் பழிவாங்கும் செயற்பாடாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு