பதவிகளைத் துறக்கத் தயார் – ஜனாதிபதி சவால்

ஊழல், மோசடிக்கு எதிராக தீர்மானங்களை எடுக்கும் போது, அதற்கு எதிராகவும் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின், சகல பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு, மக்களுடன் கைகோர்த்து முன்னோக்கி பயணிப்பதற்கு தாம் தயாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிக்கவரெட்டிய பிரதேசத்தில், நேற்று (24) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம், தவறு செய்தமையால் தான், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் 2015ஆம் ஆண்டு தோல்வியடைந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே, அவ்வாறான பிழைகளை செய்துகொண்டு மற்றும் குறைபாடுகளுடன் செயற்பட்டார்க் எனின், மக்கள் அதனை அனுமதிக்கமாட்டார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு