உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் முடிவில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றதைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியுடனான அரசியல் பயணத்தை சுதந்திரக் கட்சி கைவிடுமானால், சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கு எதிர்ப்பு இல்லையென அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் சுட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு