திருமலையில் கஞ்சாவுடன் இருவர் கைது

திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த இரண்டு பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் வழங்கிய இரகசியத் தகவலைத் தொடர்ந்து, பொலிசார் மேற்கொண்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களிடமிருந்து 02 கிலோ 100 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலையைச் சேர்ந்த 41 மற்றும் 47 வயதுகளையுடையவர்களெனத் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு