மரணித்தவர்களை நினைவுகூருவதை யாரும் தடுக்கக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ்

யுத்தம் காரணமாக உயிரிழந்த உறவுகளை எமது மக்கள் நினைவு கூரும் நிகழ்வு வடக்கிலும், தெற்கிலும் சில அரசியல்வாதிகளின் சுயலாபம் கருதி அரசியலாக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் மற்றும் வெளிவிவகாரம், அபிவிருத்திப் பணிப் பொறுப்பு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இது, அரசியல் மேடை அல்ல. உறவுகளைப் பலிகொடுத்த எமது மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற, கல்லறைகள் தவிர்ந்த ஒரு வெற்று வெளி. வெறுமை. அந்த மக்களுக்கு எதுவுமற்ற வெறுமை. அந்த வெற்று வெளியில் எமது மக்கள் தங்களது உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கின்றனர். இதற்கென ஒரு தினத்தைப் பிரகடனப்படுத்துமாறும், பொது நினைவுத்தூபி ஒன்றை அமைக்குமாறும் இந்தச் சபையில் தனிநபர் பிரேரணையொன்றை தான் கொண்டு வந்திருந்ததாகவும், அதற்கான அங்கீகாரம் கிடைத்து, அந்த அங்கீகாரம் செயல்வடிவம் பெறும் வரையில் எமது மக்களுக்கு தங்களது உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு இடம்கொடுங்கள். அதற்கு எவரும் தடையாகவோ இடையூறாகவோ இருக்கக்கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

இத்தகைய விடயங்களை மேற்கொள்வதில் தடைகள் இருக்கக்கூடாது. அதற்கான வழிகளில் திறந்துவிடப்பட வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு