61 வருடங்களில் உதிராத முடி 6 மாதங்களில் உதிர்ந்துவிட்டது

61 வருட கால தனது வாழ்க்கையில், அதிகமாக தலைமுடி உதிர்ந்தது கடந்த 06 மாத காலத்தில் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தான் நிதியமைச்சராக கடமையாற்றிய கடந்த 06 மாத காலத்திற்குள் அதிகளவான தலைமுடி உதிர்ந்ததாக அண்மையில் இடம்பெற்ற “வரி பொறுப்பு அல்ல, ஒரு சமூக கடமை” என்ற கருத்தரங்கின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டு காலம் மாத்திரமே திறந்த பொருளாதார கொள்கை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், 80களின் ஆரம்ப காலத்தில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவு 2015ஆம் ஆண்டு வரை வெவ்வேறு வழிகளில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு