பொம்மைவெளியில் ஆயுதங்கள் மீட்பு – அச்சத்தில் மக்கள் (Photos)

யாழ். பொம்மைவெளிப் பகுதியில் ஒருதொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ். பொம்மைவெளிப் பகுதியில் யூரியா பாக்கில் கட்டப்பட்ட நிலையில், பழைய ரி.56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கைக்குண்டுகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் இனந்தெரியாத நபர்களினால் கட்டப்பட்ட நிலையில் போடப்பட்டுள்ளன.

இன்று (26) காலை அப்பகுதி மக்கள் அநாமதேய முறையில் பொதி ஒன்று இருப்பதைக் கண்டு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையின் இணைந்து ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

அந்த பொதிக்குள், பழைய ஏ.கே. ரி 56 – 2 ரக துப்பாக்கிகள் 10 மற்றும் 6 எம்.எம். மோட்டார் குண்டுகள், ரி.56 ரவைகள், உட்பட கைக்குண்டுகள் வாள்கள், மகசின் 4 கைக்குண்டு 2 உள்ளிட்டவைகள் காணப்படுகின்றன. இந்த ஆயுதங்களை விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதுடன், ஆயுதங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் ஆகையினால் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் முகமாக ஆயுதங்கள் போடப்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு