வடக்குக் கிழக்கில் மழை

வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் இப்பகுதிகளில் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசுவதற்கு வாய்ப்பு காணப்படுவதாகவும், மழை காலநிலைக் காரணமாக கரையோரப் பகுதிகளில், கடல் கொந்தளிப்பும் ஏற்படலாம் எனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு, காங்கேசன்துறை, கொழும்பு மற்றும் காலி ஆகிய கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு கடுமையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு