கணக்காய்வு ஆணைக்குழு பயனற்றது

கணக்காய்வு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு தாமதம் ஏற்பட்டால், கணக்காய்வு ஆணைக்குழுவை நடத்தி செல்வது பயனற்ற செயலென கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஆணைக்குழுவை இரத்து செய்யவேண்டுமென கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளதுடன், அரசியல் அமைப்பு பேரவையால் இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையால் அதனை இரத்து செய்வதற்கான சாத்தியங்கள் தொடர்பில் தன்னால் அறிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

கணக்காய்வு சட்டம் இன்மையால் ஆணைக்குழுவிற்கான செலவுகளை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி, சபாநாயகர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கணக்காய்வு சட்டமூலத்தில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து திருத்தங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், திருத்தியமைக்கப்பட்ட சட்ட மூலத்தை அடுத்தவாரமளவில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் நாளை விஷேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு