தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவராக மீண்டும் பழனி திகாம்பரம்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் 15ஆவது பேராளர் மாநாடு நேற்று ஹட்டன் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற போது, சங்கத்தின் தலைவராக அமைச்சர் பழனி திகாம்பரம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

பொதுச் செயலாளராக எஸ். பிலிப், பிரதி பொதுச் செயலாளராக எம். திலகராஜா, நிதி செயலாளராக ஜே.எம்.செபஸ்டியன், உதவி நிதி செயலாளராக சோ.ஸ்ரீதரன், பிரதித் தலைவராக உதயகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சிரேஷ்ட ஆலோசராக சிங்.பொன்னையா, மகளிர் அணித் தலைவி சரஸ்வதி சிவகுரு, தேசிய அமைப்பாளராக நகுலேஸ்வரன், இளைஞர் அணித் தலைவர் பா.சிவநேசன் ஆகியோரும், சிரேஷ்ட உபதலைவர்களாக வி.கே.இரட்ணசாமி, ஓ.ஏ.மாணிக்கம், உபதலைவர்களாக வி.சிவானந்தன், ஏ.இராஜமாணிக்கம், எஸ்.இராஜமாணிக்கம், உதவிச் செயலாளர்களாக வீரப்பன், வைலட்மேரி, பி.கல்யாணகுமார், ரட்ணம் சிவகுமார, பிரதேச தேசிய அமைப்பாளர்களாக விஜயவீரன், கல்யாணகுமார், ஏ.பிரசாத் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு