கனடா செல்ல முற்பட்டோர் கைது

சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படும் 26 பேர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களெனத் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் பகுதியிலுள்ள இடமொன்றில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, திடீர் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட ஆண்கள் தவிர்த்து பெண்களும் இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளனரா? அவ்வாறாயின் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளது எங்கு என்பது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு