அம்பாறையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையால் மாவட்டத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் என்பதுடன் வீதிகள், வயல் வெளிகள் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகள், வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆலையடிவேம்பு பிரதேச செயலக அலுவகத்தின் ஒரு பகுதிக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளமையால், அலுவலக நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளதுடன், பரீட்சைக்காக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளதுடன், சில அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வருகையும் குறைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு