சம்பந்தனை நம்பும் முன்னாள் கடற்புலி பொறுப்பாளர்

யுத்த காலத்தில் மன்னார் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த கடற்புலிகளின் தலைவர் தியாகவராசா அருள்செல்வம் என்பவர், நேற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்துள்ளார்.

அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை சந்தித்த அவர், தமிழரசுக் கட்சியில் இணைந்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

1985ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில், மன்னார் மாவட்டத்தின் கடற்புலிகளுக்கு பொறுப்பாக இருந்த அருள்செல்வம், பின்னர் கைதுசெய்யப்பட்டு, புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு