கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது.

93 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 11ஆம் திகதிலிருந்து 14ஆம் திகதி வரை வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்களின் கட்டுப்பணத்தை செலுத்த வேண்டுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளமைக்கு அமைவாக, சுயேட்சைகுழு வேட்பாளர்கள் 5,000 ரூபாவும், அரசியல் கட்சி ஒன்றை சேர்ந்த வேட்பாளர்கள் 1500 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

பொதுஜன முன்னணி கம்பஹா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தேர்தலை பிற்போடுவதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தப்பா இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு