குடாநாட்டிற்குள் சுற்றுவட்ட ரயில் சேவை உருவாக்கப்பட வேண்டும்

கொடிகாமம் – பருத்தித்துறை – காங்கேசன்துறை வரையிலான ரயில் சுற்றுவட்ட சேவை உருவாக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதமொன்றின் போது வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றும் போது, யாழ். குடாநாட்டிற்குள் ஒரு சுற்றுவட்ட சேவையாக இரயில் சேவையினை முன்னெடுக்கும் நோக்கில் கொடிகாமம் – பருத்தித்துறை – காங்கேசன்துறை வரையிலான இரயில் பாதையினை அமைக்க வேண்டிய ஒரு கோரிக்கையினை இங்கு முன்வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பாதை அமைப்பில் எவ்விதமான தடைகளும் இருக்கப் போவதில்லை எனவும், இடையில் பாலங்கள் கிடையாது. அரச காணிகள். சுமார் 25 கிலோ மீற்றர் வரையிலான தூரம். சமவெளித் தரை என்பவற்றால், இவ்விடயம் தொடர்பில் அவதானமெடுத்து, கௌரவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களது காலத்திலேயே இத்திட்டம் சாத்தியமாக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு