வடமத்திய மாகாண முதலமைச்சருக்கு எதிராக முறைப்பாடு

வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் பேஷல ஜெயரத்னவுக்கு எதிராக சீகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

சீகிரிய, இளுக்வெவ பகுதியில் தனக்கு சொந்தமான சுமார் 29 ஏக்கர் நிலப்பரப்பில், அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக, சீகிரிய பகுதியைச் சேர்ந்த ரத்னபால ஹெலபஆராச்சி என்பவர் குறித்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

இதேவேளை, ரத்னபால இதற்கு முன்னரும் முதலமைச்சருக்கு எதிராக முறைப்பாட்டை வழங்கியுள்ளதாகவும், எனவே, இது தொடர்பில் விசாரணை செய்ய முதலமைச்சரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு, பல சந்தர்ப்பங்களில் தெரியப்படுத்தியும், அவர் ஒத்துழைக்கவில்லை எனவும், தற்போதும் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள போதிலும், அவரிடமிருந்து உரிய பதில் இல்லை எனவும் சீகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 26ம் திகதி 50 பேருடன் அரச வாகனத்தில் வந்த முதலமைச்சர், பலவந்தமாக வேலி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டதாகவும், அதனைத் தடுக்க முற்பட்ட வேளையே தன்னை அச்சுறுத்தியதாகவும், இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளதாகவும் ரத்னபால தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, தனியார் நிலங்களை சுவீகரிக்க அரச வாகனங்கள் மற்றும் ஊழியர்களை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் ரத்னபால சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு