கோட்டாபயவின் கைது புலம்பெயர் உறவுகளுக்கே சந்தோஷம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவைக் கைதுசெய்தால் சந்தோஷப்படும் ஒரே அணி புலம்பெயர் தமிழர்கள் மட்டுமேயென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இந்த அரசாங்கமானது புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக கோட்டாபயவை கைதுசெய்ய முயற்சிப்பதாகவும், இதுதொடர்பில் முடிவெடுக்கக் கூடிய முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் திருப்பதியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்ட ஆர்.பாஸ்கரலிங்கம் இன்று பிரதமரின் நிதி ஆலோசகராக கடமையாற்றுவதாகவும், அவரைத்தான் முதலில் கைதுசெய்ய வேண்டும் என்றும் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு