நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம் கொடுக்கத் தயார்

உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணக்கு முகங்கொடுக்க தயாராகவுள்ளதாக நீதியமைச்சர் அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

இரத்னபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்படுகின்ற போதிலும், அது தொடர்பில் கட்சித் தலைவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். எனவே அதற்கு குறித்த நேரத்தில் முகங்கொடுப்பெனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபா அரசாங்கத்தின் அமைச்சர் என்ற ரீதியில் அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாம் அரசு என்ற ரீதியில் முகங்கொடுக்க தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் தலதா அத்துக்கோரள மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக கூட்டுஎதிரணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு