மாற்றமடைந்து காணப்பட்ட முல்லைக் கடல்

முல்லைத்தீவு கடற்பகுதி நேற்று மாலை முதல், இதுவரை இல்லாத வகையில் மாற்றமடைந்து காணப்படுவதாக, அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, அங்கு சென்ற கடற்படையினர் அடிவானம் வரை குறித்த கடற்பகுதி கறுப்பு நிறத்தில் காணப்பட்டதை அவதானித்துள்ள கடற்படையினர், மீனவர்களைக் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும், சம்பவத்திற்கு முன்னர் பல மீனவக் குழுவினர் கடலுக்கு புறப்பட்டுச் சென்று விட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, கடந்த மூன்று வாரங்களாக பெய்த மழையினால் முல்லைத்தீவு கடலில் நீர் மட்டம் சுமார் 5 அடிவரை மேலெழுந்ததோடு, கடலின் இயல்புத் தன்மையும் மாற்றமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு