உலகளாவிய அச்சுறுத்தலை விடுத்துள்ளது வடகொரியா

கடந்தகாலங்களில் ஏவிய ஏவுகணைகளைவிட மிகவும் உயரமாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதன் மூலம் வடகொரியா உலகளாவிய அச்சுறுத்தலை விடுத்துள்ளதென அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் கடலில் விழுவதற்கு முன்பு, வடகொரியாவின் இந்த ஏவுகணை 4,500 கிலோ மீட்டர் உயரத்தில், 960 கிலோ மீட்டருக்கு பறந்ததாக தென் கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் தொடர் ஏவுகணைத் திட்டத்தின் சமீபத்திய ஒன்றான இந்த ஏவுகணையால், உலகளவிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளது. சமீபத்திய ஏவுகணை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மூத்த அதிகாரிகளிடம் ஜேம்ஸ் மாட்டிஸ் விளக்கமளித்துள்ளார்.

வட கொரியா கடைசியாக செப்டம்பர் மாதம் தனது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதுடன், அந்த மாதமே ஆறு ஆணு சோதனைகளையும் நடத்தியது. உலக நாடுகளின் கண்டனம் மற்றும் ஐ.நாவின் தடைகளுக்கு மத்தியிலும் வட கொரியா தனது ஏவுகணை திட்டத்தை அபிவிருத்தி செய்து கொண்டிருப்பதாகவும், சமீபத்திய ஏவுகணை சோதனை குறித்து விவாதிக்க ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் அவரச அமர்வாக கூட உள்ளது. முன்பு ஏவிய ஏவுகணைகளை விட, இது உயரமாக பறந்ததாகவும் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார்.

தென் பியாங்யாங் பிராந்தியத்தில் உள்ள பியாங்சாங்கில் இருந்து கிழக்கு நோக்கி அந்த பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்தப்பட்டதாக தென்கொரிய செய்தி முகமையான யான்ஹப் தெரிவிக்கும் அதேவேளை, இந்த ஏவுகணை 50 நிமிடம் பயணித்ததாகவும், வட கொரியாவால் ஏற்கனவே ஏவப்பட்ட ஏவுகணைகளைப் போல இந்த ஏவுகணை ஜப்பானுக்கு மேலே பறக்கவில்லை என்றும் ஜப்பான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக இரு தலைவர்களும் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு