வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியில் தமிழரசுக் கட்சி

எதிர்வரும் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு நேற்று முதல் இரண்டு மாவட்டங்களில் ஆரம்பமாகியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 30ம் திகதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள், மன்னார் மற்றும் வவுனியாவிலுள்ள, அக்கட்சியின் அலுவலகத்தில் இந்த நேர்முகத் தேர்வுகள் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் கட்சி விடுத்த அறிவிப்புக்கு அமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட, வடக்கில் பலர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு