2ஆவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும், வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண சாலை ஊழியர்கள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்த நிலையில், குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்ந்து இடம்பெறுகின்றது.

இப்பணிப்புறக்கணிப்பால் பருவச்சீட்டில் பயணம் செய்யும் பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

கொழும்பில் போக்குவரத்து சபை பணியகத்தில் நேற்று மாலை இதுபற்றி பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதிலும், பேச்சுவார்த்தை வெற்றியளிக்காததால் இப்பணிப்புறக்கணிப்பு இன்று புதன்கிழமையும் தொடருமென அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு