கட்டுப்பணத்தைச் செலுத்தியது ஈ.பி.டி.பி

வடக்கில் உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெறவுள்ள ஒரேஒரு நகரசபையான சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்றைய தினம் குறித்த கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இருபத்தொரு உறுப்பினர்களைக் கொண்ட யாழ். சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்கள் யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளது.

சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளாத சாவகச்சேரி நகரசபை உள்ளிட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கு வேட்பு மனுக்களைக் கோருமாறு மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்திருந்தது.

இதற்கமைவாக நேற்றைய தினம் முதலாவது கட்சியாக ஈ.பி.டி.பி கட்சியினர் தாம் போட்டியிடுவதை உறுதிப்படுத்தி கட்டுப்பணத்தை யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.அகிலனிடம் செலுத்தி வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தை பெற்றுள்ளனர்

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு