ஹெரோயின் கலந்த இனிப்பு விற்றவர் கைது

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில், ஹெரோயின் கலந்த ஒருதொகை இனிப்புப் பண்டங்களை (டொபி) விற்பனை செய்த இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமது பயணப் பையில் மறைத்து குறித்த டொபிக்களை இவர்கள் விற்பனை செய்துள்ளதாகவும், இவர்கள் வசம் இருந்து ஹெரோயின் கலந்த 50 டொபிக்கள் வரை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களை இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு