தேசத் துரோகியாக ஜனாதிபதியாகவில்லை

தேச துரோகியாவதற்கு தான் ஜனாதிபதியாக நியமிக்கப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் வசிக்கும் இலங்கை பிரஜைகளை சந்தித்து கலந்துரையாடும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், சமஷ்டி அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கோ அல்லது நாட்டை பிளவுபடுத்துவதற்கான அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கோ தாம் தயார் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நிலவிய மோசமான நிலையை மாற்றுவதற்கே தான் ஜனாதிபதியாக நியமனம் பெற்றதாகவும், வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளை திருத்தி வாழ்நாள்முழுதும் துன்பத்தில் வாடும் இலங்கையர்களுக்கு சமாதானத்தையும், அன்யோன்னியத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சூழலை கட்டியெழுப்புவதே தனது நோக்கம் எனவும், சர்வதேசத்தின் அனைத்து நாடுகளின் நன்மதிப்பையும் தற்போது இலங்கை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு