பொலிசாருக்கு எதிராக 1182 முறைப்பாடுகள்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக 1182 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பக்கசார்பாக பொலிஸார் செயற்படுதல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்தாமை உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய பொதுமக்களிடமிருந்து பொலிஸாருக்கு எதிராக கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், இதனூடாக முறைப்பாட்டளர்களுக்கான உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க பூரண முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்குடன் மக்கள் கருத்தறியும் செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும், மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டம் எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு