100 சீன ஜோடிகளுக்கு இலங்கையில் திருமணம்

எதிர்வரும் 17ஆம் திகதி சீன நாட்டைச் சேர்ந்த 100 ஜோடிகளுக்கு கொழும்பு நகர மண்டபப் பகுதியில் வைத்து திருமணம் செய்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், குறித்த சீன ஜோடிகளுக்கு இலங்கை முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாபெரும் திருமண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ள நிலையில், குறித்த நிகழ்வின் மூலம் இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த முடியும் எனவும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு