தனிநாடு கோரும் நிலைமை ஏற்படும் – வடக்கு முதலமைச்சர்

அதிகாரப்பகிர்வினை எமக்கு உட்சபட்சமாக வழங்குமாறுதான் நாம் அரசிடம் கேட்டுவருகின்றோம் அரசாங்கம் இதற்கு இணங்கினாலும் தென்பகுதியிலுள்ள சில பேரினவாதிகள் நாம் ஏதோ தனிநாடு கேட்பதாக தெரிவிக்கின்றனர்.

ஒருவேளை நாம் கேட்கும் அதிகாரப்பகிர்வினை தர முடியாமல் போகும் பட்சத்தினால்தான் தனி நாடு கோரிக்கைக்கான அவசியம் எமக்கு ஏற்படுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவுஸ்ரேலியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்

வடக்கின் நிலைமைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு யாழிற்கு விஜயம் செய்துள்ள அவுஸ்ரேலியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பிறைஸ் கச்சஸ்ஸன் அடங்கிய குழுவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு யாழ். கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இக்குழு முதலமைச்சருடன் கலந்துரையாடியதுடன் அவுஸ்ரேலிய அரசின் நிதியுதவியில் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் குறித்த தூதுக் குழுவினர் முதலமைச்சருக்கு விளக்கமளித்ததுடன், அவுஸ்ரேலியாவிலுள்ள ஆட்சி அமைப்பைப் போன்ற ஒரு தீர்வினையே தாம் எதிர்பார்ப்பதாகவும் அதையும் வழங்க தற்போது தென்னிலங்கையில் பலர் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் முதலமைச்சர் இங்கு சுட்டிக்காட்டியதுடன் இதற்கான அழுத்தத்தினை அரசிற்கு அவுஸ்திரேலியா வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயங்களில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் உறுதுணையாக இருக்குமென அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் வடமாகாண முதலமைச்சரிடம் உறுதியளித்தாரர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு