புதுக்குடியிருப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டம்

புதுக்குடியிருப்புப் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, காணி, கல்வி, சுகாதாரம் வீதி, விவசாயம், வனவளம், போக்குவரத்து, நீர்ப்பாசனம் மீன்பிடி போன்ற விடயங்கள் உரையாடப்பட்டு இதற்கான தீர்வுகளும் குறைபாடுகளும் ஆராயப்;பட்டுள்ளது.

இதன்போது அரச உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தினால் கிடைக்கப்படுகின்ற உதவித் திட்டங்கள் எதுவும் கிடைக்கப்படுவதில்லையென இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு பிரதித் தலைவருமான சி.சிவமோகன் காதர் மஸ்தான் ஆகியோரும் மாகாணசபை உறுப்பினர்களும் திணைக்கள அதிகாரிகளும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு